புதுடில்லி, அக் 1:
குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த 1945ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி, உத்தர பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். வழக்கறிஞரான இவர், 1991ம் ஆண்டு, பாஜக கட்சியில் இணைந்தார். பின், 1994ம் ஆண்டு முதல், 2004ம் ஆண்டு வரை, ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்து வந்தார்.
பின், 2015 முதல், 2017ம் ஆண்டு வரை, பீஹார் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்த், கடந்த 2017 ஜூலை மாதம், நாட்டின், 14வது குடியரசு தலைவராக பதவி ஏற்றார்.
இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின், 76வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.