ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Filed under: இந்தியா |

இன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் 75வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய பிறந்தநாளுக்கு பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

New Delhi, October 28 (ANI): Prime Minister Narendra Modi greeting the President Ram Nath Kovind on the occasion of Deepawali, at Rashtrapati Bhavan, in New Delhi on Sunday. (ANI Photo)

இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள் பிரதமர் மோடி வாழ்த்து செய்தியை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்; ராஷ்டிரபதி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது மிகுந்த நுண்ணறிவுகளும், கொள்கை விஷயங்களை பற்றிய புத்திசாலித்தனமான புரிதலும் நம் தேசத்திற்கு பெரும் சொத்து. பாதிக்கப்படுபவர்களுக்கு சேவை செய்வதில் அவர் மிகவும் இரக்கமுள்ளவர். அவரது நல்ல ஆரோக்கியத்துக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.