குடியரசு தலைவர் தமிழகம் வருகை!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகிறார் என தகவல் வெளியாகிறது.

கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார். சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தமிழ்நாடு வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.