குத்துவிளக்கேற்றினார் பிரதமர் நரேந்திர மோடி !

Filed under: இந்தியா |

புதுடில்லி : கொரோனாவை விரட்ட அனைவரும் ஒன்றாக இருப்பதை மெய்ப்பிக்க, நாட்டு மக்கள் அனைவரும் இரவு 9 மணி முதல் 9.09 வரை விளக்கேற்றி வழிப்பட்டனர். பிரதமர் மோடியும் நாட்டு மக்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்தார்.

கொரோனாவை விரட்ட, மக்கள் ஒன்றிணைந்து உள்ளதை காட்டும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் விளக்கேற்றி வழிபட்டனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்களும், மாநில முதல்வர்களும், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களும் விளக்கேற்றி கொரோனாவுக்கு எதிராக பிரார்த்தனை செய்தனர்.