குப்பை கொட்டினால் ரூ.5000 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

Filed under: சென்னை |

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டினால் ரூபாய் 100 முதல் 5000 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னை மாநகராட்சி கடந்த சில நாட்களாக சென்னையை தூய்மைப்படுத்தும் பணியை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நீர்வள தடங்கள் மற்றும் பொது இடங்கள் ஆகிய பகுதிகளில் குப்பைகளை கொட்டினால் 100 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இந்த எச்சரிக்கையை மனதில்கொண்டு சென்னை நகரை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.