முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கிய அரசாணையை வழங்கியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமரிஅனந்தன் காங்கிரஸ் பிரமுகர் என்பதும், சுதந்திர போராட்ட தியாகி ஆவார். தமிழுக்கும் தமிழகத்திற்கும் தன் வாழ்நாளெல்லாம் பெருமை சேர்த்த குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது. இக்கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதையடுத்து தமிழக வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பில் அவருக்கு ஒரு வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார். இது குறித்த அரசாணையை இன்று குமரி அனந்தனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கொடுத்தார். இதுகுறித்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.