60 தெருநாய்களை கொன்று ஆற்றங்கரையில் மாநகராட்சி ஊழியர்கள் புதைத்ததாக பொதுமக்கள் புகாரளித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஏராளமான தெருநாய்கள் கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் இருப்பதாகவும் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோர்களை நாய்கள் கடித்ததாகவும் புகாரளிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சரின் தனி பிரிவிற்கு பல புகார்கள் குவிந்ததையடுத்து கடந்த ஒன்பதாம் தேதி இரவு நாய் பிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 60 நாய்கள் பிடிக்கப்பட்டதாகவும் அந்த நாய்கள் இரும்பு ராடுகளால் அடித்துக்கொண்டு ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் மத்தியில் ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கூறிய போது என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் நாய்களைக் கொன்று புதைத்ததாக புகாரளித்துள்ளனர். பிடிக்கப்பட்ட நாய்களை கொள்ளிடம் வரையில் பாதுகாப்பாக விட்டு விட்டோம், நாய்களை கொல்லவும் இல்லை, புதைக்கவும் இல்லை என்று கூறியுள்ளார்.