குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்த நயன் – விக்கி!

Filed under: சினிமா |

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் சமீபத்தில் இருகுடும்பத்தினர் மத்தியில் நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல்கள் வெளிவந்தன.

கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வரும் நிலையில், இருவரும் எப்போது திருமணம் செய்யப் போகிறார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது வரும் ஜூன் 9ம் தேதி நடிகை நயன் தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருப்பதியில் திருமணம் நடக்கவுள்ளதாக கூடுதல் தகவல் வெளியானது. இன்று நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின், லால்குடி அருகேயுள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் வழிபடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.