குழந்தையைக் கொன்ற தம்பதியர் கைது!

Filed under: இந்தியா |

3வதாக பிறந்த குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற தம்பதியரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பிகானேரின் கோலயத் தாலூகாவின் தியாத்கா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜவல்லலால் மேக்வால் (35). இவர் அரசுத்துறையில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு கீதா தேவி (33) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளது. அவரது மனைவிக்கு 3 வதாக குழந்தை பிறந்துள்ளது. ஆனால், மாநில அரசின் இரண்டு குழந்தைகள் திட்டம் அமலில் உள்ளதால், நிரந்த வேலை கிடைக்காமல் பறிபோய்விடுமோ என்று அச்சம் ஏற்பட்டது. எனவே, 3 வதாகப் பிறந்த 5 மாதக் குழந்தையை ஜவல்லால் மேக்வாலும் அவரது மனைவியும் கால்வாயில் வீசினர். இதுகுறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, இருவரும் குழந்தையை வீசிப் படுகொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இந்த விவகாரத்தில் நேற்று தம்பதியர் இருவரும் கைது செய்யப்பட்டனர். அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 3 வதாக குழந்தை பிறந்தால் கட்டாய ஓய்வு பாலிசி திட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.