குவிந்த குற்றச்சாட்டுகள்: தப்பியோடிய காவல் ஆய்வாளர்!

Filed under: தமிழகம் |

ஜூன் 27

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நகர காவல் நிலையத்தின் ஆய்வாளராக, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது திருநாவுக்கரசு பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதும், மணல்
கடத்தல், காட்டன் சூதாட்டம் என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, கரன்சிகள் குவித்து வந்தார். ராணிப்பேட்டை தனி மாவட்டமாக உருவான பிறகு, மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் மயில் வாகனத்தை ஏமாற்ற முடியாமல், பல குற்றச்சாட்டுகளில் ஆதாரங்களுடன் சிக்கிக்கொண்டார்.

இதற்கிடையே, பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கியுள்ள, வி.சி., கட்சி பிரமுகர் நரேஷ் 007 தனிப் படையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆய்வாளருக்கு வார மாமூல் அளித்து வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், தடை செய்யப்பட்ட லாட்டரி காட்டன் சூதாட்டத்தை நடத்துபவர்கள், புதிய டிஎஸ்பி யிடம் ஆய்வாளர் மீது
குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

ஆய்வாளர் திருநாவுக்கரசு மீது, பல்வேறு குற்றசாட்டுகள் குவிந்ததால் அவர் கடந்த 24 ஆம் தேதி காவல் நிலையத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல், காவல்துறை விதிகளை மீறி யாகம் நடத்தியுள்ளார். இதுகுறித்து டி.ஐ.ஜி., காமினிடம் புகார் சென்றுள்ளது. இத்தகவல் அறிந்ததும் ஆய்வாளர் திருநாவுக்கரசு மருத்துவ விடுப்பில் எஸ்கேப்.