சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டிலும் அதிகமாக உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் போன்றவர்களும் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை காவல் அதிகாரிகள்கொரோனாவால் பாதிக்கப்பட்டு எவரும்
பலியாக வில்லை.
தற்போது சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காவல் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார்.
மேலும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் அவரின் உடல்நிலை மோசமானதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் காவல் அதிகாரி இவர் தான்.