கேன்ஸ் திரைப்பட விழாவில் மாதவனின் திரைப்படம்

Filed under: உலகம்,சினிமா |

நடிகர் மாதவன் நடித்துள்ள “ராக்கெட்டரி” திரைப்படம் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் பார்த்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் மாதவன் நடித்த ‘ராக்கெட்டரி’ திரைப்படம் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட நிலையில் இப்படத்தை ஏ.ஆர்.ரகுமான், பார்த்திபன், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல தமிழ் திரையுலக பிரபலங்கள் பார்த்துள்ளனர். இப்படத்தை பார்த்து ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் மிகச்சிறந்த படம் என்றும் மாதவன் மேல் தனது மரியாதை அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் பார்த்திபன் இந்த படத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். நடிகர் மாதவன் நடித்து இயக்கி தயாரித்த ‘ராக்கெட்டரி’ படம் ஜூலை 1ம் தேதி வெளியாக உள்ளது.