கேன் வாட்டருக்கு டிமாண்ட் வருமா?

Filed under: சென்னை |

திடீரென தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். கேன் வாட்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இன்று தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜம்புலிங்கம் தலைமையில் நடந்த நிலையில் கூட்டத்திற்கு பின்னர் வரும் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர். லாரிகளில் தண்ணீர் எடுக்க உரிமை மறுப்பது லாரிகளை காவல்துறையினர் பிடிப்பது போன்றவற்றை கண்டித்து தண்ணீர் லாரிகள் வரும் 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன் காரணமாக கேன் வாட்டர் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.