கேள்விக்கு பதிலளிக்க தயார்; உள்துறை அமைச்சர் அமித்ஷா!

Filed under: அரசியல்,இந்தியா |

உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இன்று மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த தயார் என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டுமென்றும் பிரதமர் அவைக்கு வந்து பதிலளிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை பிரதமர் ஏற்காததை அடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தில் அமளி செய்து வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த தயார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மணிப்பூர் வன்முறை குறித்த எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்க தான் தயாராக இருப்பதாகவும் எனவே அவையை சமூகமாக நடத்த எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.