கொரோனா எண்ணிக்கை மீண்டும் உயர்வு!

Filed under: சென்னை |

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 50க்கும் குறைவான இருந்து வந்த நிலையில் இன்று சற்றே அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,54,217 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3,172 56 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,701 என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.