கொரோனா : தமிழகத்தில் 8000 பேர் பாதிப்பு!

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை,மே 11

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 798 கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது, 6 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 538, செங்கல்பட்டில் 90, திருவள்ளூரில் 97, அரியலூரில் 33 என சுகாதாரத்துறையின் செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது.

பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது, பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 92 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 2,051 ஆக உள்ளது. தற்போது வரை 2,54,899 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.