கொரோனோ வைரசுக்கு மருந்து : ஊரை ஏமாற்றி கோடிகளை குவிக்கும் போலி சித்தா டாக்டர் திருத்தணிகாசலம்!

Filed under: சென்னை,தமிழகம் |

தீராத வியாதிகளுக்கும், மருந்து கண்டுபிடிக்க முடியாத நோய்களுக்கும், குணப்படுத்தவே முடியாத நோய்களுக்கும் என்னிடம் மருந்து உள்ளது. நான் குணப்படுத்தி விடுவேன் என்று கூறி மக்களையும் அரசையும் ஏமாற்றும் படிக்காத மேதை ‘டுபாக்கூர்’ டாக்டர் திருத்தணிகாசலம் அவர்களின் தில்லாலங்கடி மோசடிகளை பார்ப்போம்!

‘டுபாக்கூர்’ டாக்டர் திருத்தணிகாசலம்

சென்னை, கோயம்பேடு, ஜெய்நகர் 23வது தெரு கதவிலக்கம் 8/18ல் கோயம்பேடு பேருந்துநிலையம் எதிரில் இயங்கி வரும் பிரபல சித்தா மருத்துவ மனைதான் ரத்னா மருத்துவமனை. இதன் உரிமையாளர், நிர்வாகி, டாக்டர் என அனைத்துமே ஐயா ‘டுபாக்கூர்’ திருத்தணிகாசலமே!

* ஐயா படிக்காதமேதை திருத்தணிகாசலம் முதலில் ஙிஷிவிஷி டாக்டர் பட்டம் முறைப்படி படிக்கவில்லையே தவிர, மக்களை, நோயாளிகளை எப்படி ஏமாற்றி பிழைப்பது என்று அக்குவேறு ஆணிவேராக தெரிந்து வைத்துக் கொண்டு, பல ஆண்டு காலமாக தான் ஒரு டாக்டர், மாமேதை என ஊரையும் உலகையும் நம்ப வைத்து, நாடுவிட்டு நாடு சென்று தனது டுபாக்கூர் கலையை காட்டி பல லட்சம் டாலர்களையும் குவித்துள்ளார். அது எப்படி என்று பார்ப்போம்!

* ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருக்கத்தான் செய்வான்!

* இவரது திறமைகள் யாதெனில் முதலில் யாராலும் குணப்படுத்த முடியாத நோயை தான் குணப்படுத்துவதாக முதலில் ஒரு பிரஸ் மீட் வைப்பார். அதில் தன்னை மருத்துவ உலகின் மாமேதை என்றும் இந்த தீராத நோய்க்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறி, மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்த கதையாக ரீல் ரீலாக சுற்றி, பேட்டி எடுக்க வந்த நிருபர்களை, கவனித்து அனுப்பி, தன்னையும் தனது மருந்தையும் பிரபலப்படுத்த சொல்லி அனுப்புவார். பின்பு சில தனியார் தொலைக்காட்சிகளில் இரவு 11 மணிக்குமேல் தனது சாகசங்களை புகழ்வார். இந்த விளம்பரங்களை கண்டு இவரிடம் ஏமாந்து செல்லும் அப்பாவி மக்களை, மூளைச்சலவை செய்து, 5 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை மாத கட்டணமாக வசூல் செய்து கொண்டு, லேகியம் & மாத்திரைகளை டப்பாவில் அடைத்து விற்று விடுவார்!

* ஆனால் இவரிடம் வைத்தியம் பார்த்து இதுவரை யாரும் குணம் பெற்றதாக தெரியவில்லை. இவரது விளம்பரத்தைக் கண்டு விளக்கை தேடும் விட்டில் பூச்சிகளாக ஏமாந்தவர்களே அதிகம். ஆனால் நமது மாமேதை திருத்தணிகாசலம் ஒரு படிக்காத ‘டுபாக்கூர்’ என்பது யாருக்கும் தெரியாது!

* ஆனால், இவர் முதலில் நான் தான் எய்ட்ஸ்க்கு மருந்து கண்டுபிடித்தேன் எனவும் பின்பு சிக்கன் குனியா, டெங்கு இவைகளுக்கு மருந்து கண்டு பிடித்து, பலரை குணப்படுத்தியதாகவும் அரசாங்கமே இவரது மருந்துகளுக்கும் கண்டு பிடிப்புகளுக்கும் உரிமம் கொடுத்து உள்ளதாகவும் ரீல் விடுகிறார். இதன் உச்சகட்டமாக தற்போது உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ¨க்கும் தன்னிடம் மருந்து உள்ளது எனவும் கூறி கடந்த வாரம் 14ம் தேதி சனிக்கிழமை அன்று பிரஸ் மீட் கூட்டுகிறார். இவரது சென்னை ரத்னா மருத்துவமனையில். அதன் பின்பே இவரைப் பற்றி நமது சிறப்பு நிருபர் விசாரணையை துவங்கியுள்ளார். அதில் கிடைத்த பல தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன!

* சித்தா கவுன்சிலில் இவரைப் பற்றி விசாரிக்க இவர் BSMS படித்து முறைப்படி பதிவு செய்யவில்லை. தான் ஒரு பரம்பரை வைத்தியர் என கூறிக் கொண்டு ஊரை ஏமாற்றுகிறார் என்பது உறுதியாகிவிட்டது. இவர் மனைவி வேணி என்பவர் BSMS படித்து உள்ளார். அவரை வைத்து நான்தான் டாக்டர் என ஊரை ஏமாற்றுகிறார்!

* இவர் ஆண்மைக்குறைவு, குழந்தையின்மைக்கு சிறந்த மருத்துவராம். ஆனால் இவருக்கே கல்யாணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் இன்று வரை குழந்தையில்லையாம். ‘கூறை ஏறி கோழிபிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்’ என்ற கதையாகிறது !

* பல வி.வி.ஐ.பி.க்கள், வி.ஐ.பி.க்கள் உடன் தான் எடுத்துக்கொண்ட பல கலர் கலர் போட்டோக்களை வைத்து ஊரை ஏமாற்றும் இவரைப் பற்றி நேரடி பேட்டிக்காண, பலமுறை இவரது மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டும் நமது தொடர்புக்கு வர மறுத்துவிட்டார். கடைசியாக இவரது மனைவி டாக்டர் வேணி அவர்களிடம் பேச, அவரும் எனது கணவர் BSMS படிக்கவில்லை. நான் மட்டுமே படித்துள்ளேன். சில படித்த டாக்டர்கள் உடன் உள்ளனர். எனது கணவர் பரம்பரை வைத்தியர் என கூறினார். மேலும் தாங்கள் பல தீராத நோய்களை தீர்த்ததாகவும் இப்போது கொரோனா வைரஸை தீர்க்க தனது கணவர் பாடுபடுவதாகவும் கூறினார். தற்போது தனது கணவர் டெல்லி சென்றிருப்பதாகவும் தங்களிடம் கொரோனா மருந்து உள்ளது எனவும் கூறினார். மேலும் தங்களை கோயம்பேடு முதல் கோட்டை வரை பலர் தங்களை பாராட்டி உள்ளதாகவும் சுயபுராணம் பாடினார்!

* ஒரு நேர்மையான பெயர் சொல்ல விரும்பாத சித்தா கவுன்சில் அதிகாரி ஒருவர் வசம் திருத்தணிகாசலம் மீது ஏன் நடவடிக்கை இல்லை என கேட்டபோது, “சார் திருத்தணிகாசலத்நை நாங்கள் விசாரணைக்கு கூப்பிட்டாலே யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்பதுபோல அவரை விசாரிக்க கூடாது என உத்திரவு போன் மூலமாக கோட்டையில் இருந்து வரும் சார். பிறகு நாங்கள் என்ன செய்ய முடியும் என தனது இயலாமையை விளக்கினார். மேலும் அவர் வரும்போதே கையில் ஒரு போட்டோ ஆல்பத்துடன் வருவார். அதிலே பல வி.வி.ஐ.பி.க்கள், வி.ஐ.பி.க்கள் உடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டுவார். அதில் தமிழக அரசு அதிகாரிகள் முதல் அமைச்சர்கள், கவர்னர் ஏன் முதல்வரின் படங்கள்கூட உள்ளன அப்போ… நாங்கள் என்ன சார் செய்யமுடியும்?

* எனவே இந்த டுபாக்கூர் திருத்தணிகாசலம் மீது அரும்பாக்கம் சித்தா முதல் DMS வரை உள்ள எந்த அதிகாரி நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம். திருத்தணிகாசலம் மீது நடவடிக்கை பாயவில்லையெனில் இவரது லீலைகள் பூதாகரமாக தோண்டத்தோண்ட வந்துகொண்டே இருக்கும். ஒரு சுபயோக சுபதினத்தில் இவர் போலி சித்தா டாக்டர் என்பது தெரிந்து மக்களே துரத்தியடிக்கும் நாள் வரும்.