கொரோனாவை அழிக்கும் மருந்து தயார் – சீனாவின் பீகிங் ஆய்வகம் தகவல்!

Filed under: உலகம் |

கொரோனா வைரசை முடிவுக்கு கொண்டு வரும் மருந்தை கண்டுபிடித்தாக சீனாவின் பீகிங் ஆய்வகம் என கூறியுள்ளது.

சீனாவின் உகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவியது. இந்த வைரஸை அழிப்பதற்கு பல நாடுகள், பல ஆய்வுகள் போராடி வருகின்றது. இந்த தருணத்தில் சீனாவின் உள்ள பீகிங் பல்கலைக்கழத்தின் ஆய்வகம் கொரோனா வைரஸுக்கு தேவையான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இந்த மருந்து கொடுப்பதன் மூலம் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் குணமடைவார்கள் ம்,மற்றும் வைரஸின் எதிர்ப்பு திறனும் கொடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நாங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எலியின் உடலில் இந்த மருந்தை அளித்த போது ஐந்து நாட்களில் வைரஸ் பலமடங்கு குறைந்து விட்டதாகவும் மற்றும் இந்த ஆண்டு கடையில் மருந்தை தயார் செய்து விடுவோம் எனவும் சீனாவின் உள்ள பீகிங் பல்கலைக்கழத்தின் ஆய்வகம் கூறியுள்ளது.