கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி!

Filed under: தமிழகம் |

சென்னை உயர்நீதிமன்றம் இன்று தமிழகத்தையே உலுகிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேருக்கான வழக்கின் தீர்ப்பை அறிவித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 10 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தனர். மேல்முறையீட்டு வழக்கின் வாதங்கள் கடந்த சில மாதங்களாக முடிவு இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது. இத்தீர்ப்பில் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து கோகுல்ராஜ் வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து யுவராஜ் உள்பட 10 பேரும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல்முறையீடு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.