கோடைக்கால சிறப்பு ரயில்: தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

Filed under: தமிழகம் |

தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு காரணமாக தென் மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் 27ம் தேதி, மே மாதம் 4,11,18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தாம்பரம்  -நெல்லை இடையே இரவு 9 மணிக்கு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் நெல்லை  -சென்னை எழும்பூர் இடையே ஏப்ரல் 28-ம் தேதி மே மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மதியம் 1 மணிக்கு இயக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இக்கோடைகால சிறப்பு ரயில்களை தென் மாவட்ட மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு ரயில்வே துறை அறிவுறுத்துள்ளது. ரயிலின் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது