கோடை வெயில் பற்றி இந்திய வானிலை மையத்தின் தகவல்!

Filed under: தமிழகம் |

இந்திய வானிலை ஆய்வு மையம் இனிமேல் வெயில் தான், மழைக்கு வாய்ப்பில்லை என அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுதும் கோடை வெயில் கொளுத்தி வந்தாலும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 12 முதல் அதாவது இன்று முதல் ஏப்ரல் 15 வரை வறண்ட வானிலையே இருக்கும் என்றும் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்றும் அதாவது 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.