கோயிலுக்குள் நுழைந்த தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்!

Filed under: இந்தியா |

கோயிலுக்குள் நுழைந்த தலித் குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல் ராஜஸ்தான் மாநிலத்தில் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இன்றும் மனிதர்கள் சக மனிதர்களை கொடுமைப்படுத்துவதை விடவில்லை என்று சில சம்பவங்கள் மூலம் தெரிகிறது. அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் என்ற மாவட்டத்தில் உள்ள லம்பா ஜாதன் என்ற கிராமத்தில் ஒரு கோயிலில் நுழைந்ததற்காக தலித் குடும்பத்தினர் மீது அந்த ஊரைச் சேர்ந்த சிலர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுகுறித்து, வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. இரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்துகின்றனர், தங்கள் விடும்படி கெஞ்சியும்கூட மீண்டும் தாக்குதல் நடத்தும் வீடியோ அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.