ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தீடீரென தாக்குதல்!

Filed under: இந்தியா |

ஜிம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் திடீரென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி உள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் பகுதியில் 110வது பிரிவின் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் சென்றிருந்த சமயத்தில் திடீரென்று வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்து உள்ளனர்.

https://twitter.com/ANI/status/1307939852457893889

இந்தத் தாக்குதலில் கடவுளின் தயவால் எந்த சிஆர்பிஎஃப் வீரர்களும் காயம் ஏற்படவும் மற்றும் உயிர் இழக்கவும் இல்லை. இதை அடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் அப்பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணியை செய்து வருகின்றனர்.