தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்தார் அமைச்சர் மா.சு !

Filed under: சென்னை,தமிழகம் |

தமிழகம் முழுவதும் இன்று (03.10.2021) நடைபெற்ற நான்காவது மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம்களை  காலை 7 மணி முதல் தேனி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை  ஆகிய 3  மாவட்டங்களில் ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 24,882 மையங்களில் நடைபெற்றது. இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி அளிக்க திட்டமிடப்பட்டது.

முதலாவது மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு  முகாம் 12.09.2021 அன்று நடைபெற்றதில் 28.91 இலட்சம் பயனாளிகளுக்கும்,  இரண்டாவது  மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் 19.09.2021 அன்று நடைபெற்றதில் 16.43 இலட்சம் பயனாளிகளுக்கும் மற்றும் முன்றாவது மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் 26.09.2021 அன்று நடைபெற்றதில் 25.04 இலட்சம் பயனாளிகளுக்கும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.

இன்று சுமார் 15 மாவட்டங்களில் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக தடுப்பூசி பணிகள் சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் நடைபெற்ற நான்காவது மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 17,19,544 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 9,68,010 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 7,51,534 பயனாளிகளுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமே 1,44,75,866 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தேனி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களை ஆய்வு செய்தார். மேலும், மாநிலத்தில் இன்று நடைபெற்ற நான்காவது மாபெரும் கோவிட் –19 தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு நாளை (04.10.2021) கோவிட்-19 தடுப்பூசி பணிகள் நடைபெறாது என தெரிவித்துள்ளார்.