சசிகலாவிடம் சரமாரியான கேள்விகள்!

Filed under: சென்னை |

இன்று சசிகலாவிடம் அதிகாரிகள் கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு குறித்து 4 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே கொடாநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை குறித்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே இந்த வழக்கில் பல பிரமுகர்களிடம் விசாரணை நடந்துள்ளது.
அதைத் தொடர்ந்து இன்று சசிகலாவிடம் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை செய்தனர். கொடநாடு எஸ்டேட் எப்போது வாங்கப்பட்டது, எத்தனை பேர் பணி செய்கிறார்கள்? அந்த பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தன, கொலை கொள்ளை நடந்த பிறகு சசிகலா ஏன் சென்று பார்க்கவில்லை என தனிப்படை அதிகாரிகள் கேள்வி கேட்டுள்ளனர்.
சசிகலாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் சிலரையும் விசாரணைக்காக போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.