சசிகலாவிற்கு கார் கொடுத்தவர் கட்சியில் இருந்து நீக்கம்

Filed under: அரசியல்,தமிழகம் |

சசிகலாவிற்கு கட்சிக் கொடியுடன் கார் வழங்கியவர் உள்பட 7 பேர் கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரில் இருந்து நான்கு ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு சென்னை திரும்பும் சசிகலா, அதிமுக கொடி கட்டிய காரில் பயணம் செய்யக்கூடாது என காவல்துறை நோட்டீஸ் வழங்கிய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சம்பங்கி என்பவர் கட்சிக் கொடி கட்டிய அவரது காரை சசிகலா பயனம் செய்ய வழங்கினார்.

இந்நிலையில், சசிகலாவிற்கு வரவேற்பு வழங்கியதற்காக எஸ்.ஆர்

சம்பங்கி உள்பட 7 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,

கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டாதாலும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாலும் இன்று முதல் டி.தட்சணாமூர்த்தி, எஸ்.ஆர்.சம்பங்கி, பி.சந்திரசேகர ரெட்டி, ஜானகி ரவீந்திர ரெட்டி, ஆர்.பிரசாந்த் குமார், ஏ.வி.நாகராஜ், வி.ஆனந்த் ஆகிய 7 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.