சமந்தாவுக்கு நோய் தீரவில்லை!

Filed under: சினிமா,தமிழகம் |

samantha710201232129AMசரும நோயினால் அவதிப்பட்ட சமந்தா சிகிச்சைக்குப்பின், ஓரளவுக்கு தேறினாலும் படப்பிடிப்பில் மேக்கப்போட்ட சில நிமிடங்களில் மீண்டும் அரிப்பு நோயால் தாக்கப்பட்டு சிரமப்படுகிறார். உடம்பு முழுக்க கொப்புளங்கள் தோன்றி சிகிச்சை பயனின்றி செய்வதறியாமல் விழிக்கிறார். இதனால் லிங்குசாமியின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுடன் சமந்தா அந்தரங்கமாக நெருங்கியதால் சமந்தாவின் சமீபத்திய காதலன் சித்தார்த் அதிர்ச்சியுற்று ஐதராபாத்திற்கு பறந்துபோய் பெட்டம்மா கோவில் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமந்தாவுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். ஆலோசனை நள்ளிரவு வரை நீடித்தது. மகேஷ்பாபு விஷயத்தில் உஷாராக இருக்கவேண்டும் என்று சித்தார்த் எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
அரிப்பு நோய் பரிபூரணமாக குணமான பின்பே திருமணம் என்று சித்தார்த் திட்டவட்டமாக சமந்தாவிடம் சொல்லிவிட்டாராம்.