சமோசா விற்று ஐ.ஏ.எஸ் படிக்கும் மாற்றுத்திறனாளி!

Filed under: இந்தியா |

ஐஏஎஸ் படிக்க விரும்பிய மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் பணம் இல்லை என்ற காரணத்தினால் சமோசா விற்று அதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் ஐஏஎஸ் படித்து வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நாக்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சூரஜ் இளங்கலை படிப்பு முடித்து வேலை கிடைக்காமல் உள்ளார். இதையடுத்து அவர் ஐஏஎஸ் படிக்க முடிவு செய்து அதற்காக தீவிர முயற்சி செய்து வருகிறார். ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை அடைவதற்காக அவர் சமோசா வியாபாரம் செய்து, அதில் கிடைக்கும் பணத்திலிருந்து ஐஏஎஸ் பயிற்சி பெற்று வருகிறார். இது குறித்த புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக வருவதை அடுத்து பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருடைய ஐஏஎஸ் படிப்பிற்காக தாங்கள் உதவி செய்ய தயார் என பல சமூக வலைதள பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.