சம்பளத்தை உயர்த்திய பிரபல நடிகர்!

Filed under: சினிமா |

“பாகுபலி” திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் பிரபாஸ். இத்திரைப்படத்தின் மூலம் உலகளவில் புகழ் பெற்றார். தற்போது இவர், “ஆதிபுரூஸ்,” “சலார்” உட்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஒரு திரைப்படத்தில் நடிக்க இவர் சுமாராக ரூ.100 கோடி பெறுகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “ஷாகோ”, “ராதே ஷ்யாம்” ஆகிய திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. இந்நிலையில், ஓம்வுத் இயக்கத்தில் பிரபாஸ், சாயிப் அலிகான் நடிப்பில் உருவாகிவரும் “ஆதிபுரூஸ்” படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ.120 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.