சிக்கன் சமைக்காததால் வீட்டை கொளுத்திய கணவர்!

Filed under: இந்தியா |

மனைவி சிக்கன் சமைத்து தருவதற்கு மறுத்ததால் வீட்டையே கொளுத்தியுள்ளார் கணவர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த உஜ்ஜையின் அருகே மது போதையில் வீட்டுக்கு வந்த கணவர் தனக்கு சிக்கன் குழம்பு வைக்க வேண்டும் என மனைவியிடம் கேட்டதற்கு சிக்கன் வைக்க முடியாது ஏற்கனவே பருப்பு சமைத்து விட்டதால் அதை சாப்பிடும் படி மனைவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மது போதையில் மனைவியை தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டுக்கு தீ வைத்துள்ளார். இதன் காரணமாக வீட்டின் அலமாரியில் இருந்த சுமார் 3.5 லட்சம் பணம் மற்றும் நகைகள், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட இயந்திரங்கள் தீயில் சேதம் அடைந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து கணவர் மீது மனைவி போலீசில் புகாரளித்துள்ள நிலையில் போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிக்கன் சமைக்க முடியாது என்று மனைவி கூறியதால் 3.00,000 ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் சேதமாகி உள்ளது. அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதை என்பது மனிதனின் மூளையையே மழுங்க செய்துவிடும் என்றும் போதையிலிருந்து எப்போது மனிதர்கள் விடுபடுகிறார்களோ அப்போதுதான் இவ்வுலகம் முன்னேறும் என்றும் கூறப்பட்டு வருகிறது.