“சித்தா” போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்!

Filed under: சினிமா |

அருண்குமாரின் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் “சித்தா” திரைப்படத்தின் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

நடிகர் சித்தார்த் “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன்பின் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். மணிரத்னம் இயக்கிய “ஆயுத எழுத்து” படத்திலும் நடித்தார். ஆனால் அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றிகள் அவருக்குக் கிடைக்கவில்லை. கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை. தற்போது “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சித்தார்த் நடிப்பில் “பண்ணையாரும் பத்மினியும்“ மற்றும் “சேதுபதி” ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ள “சித்தா” என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அறிமுகப்படுத்தி வீடியோ வெளியிட்டு பாராட்டியுள்ளார் கமல்ஹாசன். இப்படத்தின் புதிய போஸ்ட நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இப்படம் ஒரு குழந்தைக்கும், அவளின் சித்தப்பாவுக்கும் இடையில் நடக்கும் உணர்ச்சிப்பூர்வமான கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.