சிம்பு திரைப்பட டீசர் நாளை ரிலீஸ்!

Filed under: சினிமா |

“பத்து தல” திரைப்படத்தின் டீசர் நாளை ரிலீசாகும் நிலையில் அத்திரைப்படத்தில் நடித்துள்ள சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

“பத்து தல” திரைப்படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை “சில்லுனு ஒரு காதல்,” “நெடுஞ்சாலை” ஆகிய படங்களை இயக்கிய என்.கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். “பத்து தல” திரைப்படம் கன்னட படமான “கன்னா” படத்தின் ரீமேக் ஆகும். ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கில் ‘நம்ம சத்தம்’ ரிலிஸாகி வைரலாது. நாளை மாலை 5:31 மணிக்கு “பத்து தல” திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இதனால், சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், இப்படம் வரும் மார்ச் 30ம் தேதி ரிலீஸாகவுள்ளது.