சிரியா தலைநகரிலும் நிலநடுக்கம்!

Filed under: உலகம் |

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது அதன் அண்டை நாடான சிரியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது அண்டை நாடான சிரியாவின் தலைநகரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 1300 பேரும் பலியானதாக கூறப்படுகிறது. இன்று மாலை துருக்கியில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் என்ற பகுதியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்துடன் சாலையில் ஓடும் காட்சியை காண முடிவதாக அந்நாட்டில் உள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை நிலநடுக்கம் காரணமாக 1300க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாகவும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.