கொரோனா முடியும் முன்பே சீனாவில் பரவும் புதிய வைரஸ் – பீதியில் மக்கள்!

Filed under: உலகம் |

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. தற்போது வரை இந்த வைரசுகான சரியான தடுப்பூசி மருந்து உலக நாடுகளால் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இந்த வைரஸ் சீனாவில் ஓரளவு கட்டுக்குள் வந்தாலும் மீண்டும் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் முடியும் முன்பே புதிய வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த நஞ்ஜிங் என்கிற பெண் இந்த புதிய வைரசால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்திருக்கிறது.

இதனை அடுத்து அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருடைய உடலில் இருக்கும் ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் மற்றும் பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்து இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும், ஒரு மாதத்திற்கு பின்பு சிகிச்சை பெற்று குணமடைந்து இருக்கிறார்.

Tick borne என்கிற புதிய வைரசால் இதுவரை 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை சீனாவின் ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் அதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.