சிவகாசியில் ஒரே இடத்தில் 2 வெடிவிபத்து!

Filed under: தமிழகம் |

இரண்டு இடங்களில் அடுத்தடுத்து சிவகாசி அருகே ஒரே இடத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவகாசி அருகே ரெங்கபாளையத்தில் பகுதியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரெங்கபாளையம் மற்றும் கிச்சநாயக்கன்பட்டி ஆகிய இரண்டு பகுதிகளில் நடந்த முடிவு விபத்தில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சிவகாசி பகுதியில் ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்திள்ளது. இந்த வெடி விபத்து குறித்து தனித்தனியாக இரு வழக்குகள் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.