சிவகார்த்திகேயன் படம் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் தகவல்!

Filed under: சினிமா |

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீசுக்காக காத்துள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தின் ‘அயலா அயலா’ என்ற பாடல் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினரோடு சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர்ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் “அயலான்” படத்துக்கு இசையமைக்க, நான் நினைத்ததை விட 5 மடங்கு கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. அதற்காக 3 மாதங்கள் தொடர்ந்து கடின உழைப்பை மேற்கொண்டோம்” எனக் கூறியுள்ளார்.