சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங் தொடக்கம்!

Filed under: சினிமா |

கடந்த ஆண்டே சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கடந்த மாதம் காஷ்மீரில் இதன் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.

படத்தின் கதை பற்றி வெளியான தகவலின் படி சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு ராணுவ வீரராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதனால் காஷ்மீரில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. எதிர்பார்த்ததை விட இந்த படத்தின் ஷூட்டிங் அதிக நாட்கள் நடந்ததால் பட்ஜெட் எக்கச்சக்கமாக எகிறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் இப்போது சென்னை ராணுவ பயிற்சியகத்தில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் மீசையை எடுத்து இளமையான தோற்றத்துக்கு மாறியுள்ளார்.