சி.வி.சண்முகம் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு

Filed under: அரசியல் |

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு முழு காரணம் டிடிவி தினகரன் தான் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில், “ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் டிடிவி தினகரனால் தான் அவர் சிறைக்கு சென்றார். அதனால்தான் டிடிவி தினகரன் வீட்டைவிட்டு ஜெயலலிதா விரட்டியடித்தார். டிடிவி தினகரனை நம்பி சென்ற 18 எம்எல்ஏக்கள் இன்று அனாதையாக உள்ளனர். அவரை நம்பியவர்கள் தான் ஏமாந்து போனார்கள். டிடிவி தினகரன் ஒரு துரோகி, அம்மாவுக்கும் துரோகம் செய்தவர், அவர் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டிய அவசியமில்லை” என்று ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.