சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!

Filed under: தமிழகம் |

மீண்டும் 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் எச்சரித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில காலமாக குறைந்து வந்த நிலையில் சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக எச்சரித்துள்ளார். மேலும் சென்னையில் பிஏ 4 தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மக்கள் கவனக்குறைவாக இருப்பதை தவிர்த்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.