சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வீட்டில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று!

Filed under: தமிழகம் |

தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின்மாமனார், மாமியாருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியான நிலையில், அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவருடைய மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனால் அவர்கள் கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை ராதாகிருஷ்ணன் ட்விட்டர் மூலம் கொடுத்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என தெரிவித்துள்ளார்.