சுட்டெறிக்கிறது வெயில்!

Filed under: சென்னை,தமிழகம் |

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று சென்னையில் 104 டிகிரியை தாண்டியது வெப்பநிலை.

அக்கினி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இடையே வங்க கடலில் ஏற்பட்ட புயலால் பல பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் வெப்பநிலை குறைந்திருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 104டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. சென்னையின் பல பகுதிகளில் 102 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சி, புதுச்சேரி, கரூர், வேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரியை தொட்டுள்ளது. 28ம் தேதி அக்கினி வெயில் முடிவடைய உள்ள நிலையில் இன்னும் 4 நாட்களுக்கு வெயில் தொடரும் பின்னர் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.