சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி ஹீரோயினானார்!

Filed under: சினிமா |

செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பெரும் பிரபலமடைந்தனர். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் பின்னணி பாடகருக்கான வாய்ப்பு பெரியளவில் கிடைத்தது.

சூப்பர் சிங்கர் டைட்டில் கார்டை வென்றதும் செந்திலுக்கு எக்கச்சக்க படத்தில் பாடும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்தது. தற்போது இவர்கள் இருவருமே திரைப்படம், பாடல் கச்சேரிகள் என பிசியாக இருந்து வருகிறார்கள். பெரிய வீடு, ஸ்டூடியோ, பங்களா என மளமளவென வளர்ந்துவிட்டனர். தற்போது ராஜலக்ஷ்மி “சைலன்ஸ” என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.