சூப்பர் ஸ்டாருக்கு நன்றி கூறிய கமலஹாசன்!

Filed under: சினிமா |

கமல்ஹாசன் “இந்தியன் 2” திரைப்படத்தின் இன்ட்ரோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிலீஸ் செய்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “இந்தியன் 2” பட ஷூட்டிங் நடந்து வருகிறது. “இந்தியன்” படம் 3 பாகங்களாக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் ஷூட்டிங் முடிந்த பின், அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது.அனிருத் இசையமைப்பில் உருவாகி படம் இப்படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியது. “இந்தியன் 2” திரைப்பட இன்ட்ரோவை இன்று மாலை 5:30 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிலீஸ் செய்யவுள்ளார் என்று லைகா நிறுவனம் தெரிவித்தது. அதன்படி இன்று ரஜினி, “இந்தியன் 2” இன்ட்ரோவை ரிலீஸ் செய்தார். அதேபோல் “இந்தியன்” திரைப்பட இந்தி இன்ட்ரோவை சூப்பர் ஸ்டார் அமீர்கானும், மலையாளத்தில் சூப்பர்ஸ்டார் மோகன் லாலும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர் பட இயக்குனர் ராஜமௌலியும் வெளியிட்டனர். இந்த வீடியோவில் “இந்தியன் இஸ் பேக்” என்பது போன்று கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் சேனாதியாக கம்பீரமாக நடித்துள்ளார். அவரது தோற்றமும் பேச்சும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படத்தில் சித்தார்த், மனோபாலா, உள்ளிட்டோ நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளது. நடிகர் சூப்பர் ஸ்டார் இந்த இன்ட்ரோவை ரிலீஸ் செய்ததற்கு நடிகர் கமல்ஹாசன் “எனது அருமை நண்பரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார். கமல்- மற்றும் ஷங்கர் கூட்டணியில் 2வது படமாக உருவாகி வரும் “இந்தியன் 2” திரைப்பட ஷீட்டிங்கின் போதே இந்தியன் 3ம் பாகமும் தயாராகி வருகிறது.