சூர்யாவின் புதிய இயக்குனரா இவர்?

Filed under: சினிமா |

நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தின் புதிய இயக்குனர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு துல்கர் சல்மானின் “சீதா ராமம்“ திரைப்படம் நல்ல வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை ஹனு ராகவபுடி இயக்கியிருந்தார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் துல்கருடன் ராஷ்மிகா மந்தனா, மிருனாள் தாகுர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தெலுங்கில் உருவானாலும் இந்த படம் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் ஹனு ராகவபுடி, இயக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. அவர் சூர்யாவுக்குக் கதை சொல்லி, அவரின் சம்மதத்தைப் பெற்றுள்ளதாகவும், விரைவில் இந்த படம் தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம், “வாடிவாசல்” என வரிசையாக படங்களை ஒத்துக்கொண்டுள்ளார்.