சூர்யா நடிப்பில் பிரபல தொழிலதிபரின் பயோபிக்

Filed under: சினிமா |

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவாவில் முடிவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்துக்கு ‘வீர்’ என்று தலைப்பு வைக்க இயக்குனர் சிவா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் 10 மொழிகளில் வெளியாவதால் எல்லா மொழிக்கும் பொறுத்தமான தலைப்பாக இருக்க இத்தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தில் நடித்து முடித்ததும் சூர்யா, அடுத்து வெற்றிமாறன் மற்றும் சுதா கொங்கரா ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரான ராஜன் பிள்ளையின் பயோபிக் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தை மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர்.