“சூர்யா 42” பற்றிய புதிய தகவல்!

Filed under: சினிமா |

நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படமான “சூர்யா 42” நடிகர் விஜய் திரைப்படமான ‘லியோ’ வியாபாரத்தை முறியடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் இதுவரை ரூபாய் 400 கோடி பிசினஸ் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. சூர்யா நடித்து வரும் “சூர்யா 42” படத்தின் வியாபாரம் 500 கோடியை தாண்டி விட்டதாக கூறப்படுவது நம்ப முடியாத தகவலாக உள்ளது. கோலிவுட் திரையுலகை பொருத்தவரை விஜய்க்கு தான் அதிக பிசினஸ் உள்ளது. அவரது திரைப்படம் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே பிசினஸ் முடிந்துவிடும் என்பது பரவலாக பேசப்படுகிறது. அவ்வகையில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்துள்ள “லியோ” திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படம் இதுவரை 400 கோடி பிசினஸ் ஆகியுள்ளதாகவும் இன்னும் அதிக பிசினஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தின் சாட்டிலைட் உரிமை டிஜிட்டல் உரிமை வெளிநாட்டு உரிமை உள்பட ஒரு சில பிசினஸ்களினால் 500 கோடி வரை வியாபாரமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போகத்தான் புலப்படும்.