சென்னையிலிருந்து தாமதமாக கிளம்பும் விமானங்கள்!

Filed under: சென்னை |

கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பும் விமானங்கள் தாமதமாக கிளம்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக நேற்றிரவு முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மீனம்பாக்கம் பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக விமான ஊழியர்கள் வேலைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையிலிருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டிற்கு செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக கிளம்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக துபாய், கத்தார், இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் தாமதமாக கிளம்புவதாகவும், அதேபோல் மும்பை கொல்கத்தா மதுரை திருச்சி டு விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விமானங்களும் 15 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக சென்னையில் இருந்து கிளம்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதே நேரத்தில் மற்ற பகுதியில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானங்கள் குறித்த நேரத்தில் தரையிறங்கி உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.