சென்னையில் திருப்பதி தேவஸ்தானம்!

Filed under: சென்னை |

திருப்பதியில் இருக்கும் பத்மாவதி தாயார் கோவிலைப் போல் சென்னையில் திருப்பதி தேவஸ்தானம் கட்டி இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.

சென்னை தி.நகர் ஜிஎன் செட்டி சாலையிலுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் புதிதாக பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து சென்னை மற்றும் சுற்றுப்புற மக்கள் ஏராளமானவர் திரண்டனர். குறிப்பாக ஆந்திராவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளன. ரூபாய் 10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவிலை பக்தர்கள் மிகுந்த பய பக்தியுடன் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இன்று பத்மாவதி தாயார் மற்றும் சீனிவாச சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.