சென்னையில் நில அதிர்வா?

Filed under: சென்னை |

இன்று சென்னையில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து சென்னை அண்ணா சாலையில் பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

துருக்கி மற்றும் சிரியா சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 50000 பேர் பலியாகி உள்ளனர். இன்று சென்னை அண்ணாசாலை அருகே உள்ள ஒயிட் சாலையில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கட்டிடங்களில் உள்ளவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லை என்றும் அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து கொண்டிருப்பதால் நில அதிர்வு போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்து அதன் பின் மீண்டும் கட்டிடங்களுக்குள் செல்ல ஆரம்பித்தனர்.