நாளை சென்னையில் நடக்கவிருக்கும் மாரத்தான் போட்டிக்காக ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி மத்திய கைலாசத்திலிருந்து வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. காந்தி மண்டபத்திலிருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதி இல்லை. மத்திய கைலாஷ், காந்தி மண்டபத்திலிருந்து வருவோர் எல்பி சாலை மற்றும் சாஸ்திரி நகர் வழியாக செல்லலாம். மாநகர பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் பேருந்து நிலையம் செல்ல அனுமதிக்கப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் தெரிவித்துள்ளது